Tuesday, 31 July 2018

தகவல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், செல்ஃபி மற்றும் குளோஸ் அப்

'தகவல் சொல்லி விட்டாச்சா ?' 
விடுபட்ட 
எண்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள் 
தகவலறிந்தவர்கள் 
ஒவ்வொருவராக வரத் தொடங்க 
என்ன நடந்திச்சி? ஏனிப்படி? 
என்ற தகவல்கள் பரிமாறிக்கொண்டன 
முக்கியமான தகவல் 
குளிர்பதனப் பேழையில் உறைந்து கிடக்க... 
தகவல்களே இல்லாத தகவல்களும் 
அங்கே முளைக்கத் தொடங்கியது 
சந்தூக்கிலேறி தகவல் ஊர்ந்து நடக்க 
தகவல்கள் ஒவ்வொன்றாக வீதியில் 
உதிரத் தொடங்கின... 
தகவலைத் தாமதிக்காமல் புதைத்தார்கள் 
கசிவது கொஞ்சம் குறைந்துவிட்டது 
தகவல் இப்போதுதான் 
உண்மையில் மிகவும் பத்திரமாகவிருக்கிறது. 

- மு.முகமது பாட்சா*
31 /07 /2018

No comments:

Post a Comment

Popular Posts