நுண்புனை கதைகள் 9

நான்சி
அவள் தன் பெயரை ,'நான்சி' என்று அறிமுகப்படுத்திக்
கொண்டாள்.
என் பெயரை அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னேன்.
பெயரொன்றும் எங்களுக்கு இடைஞ்சலாக இல்லை....
நாங்கள் அப்போது சிரித்துக் கொண்ட சிரிப்பு அவ்வளவு
கேவலமானது.
நாங்கள் உட்கார்ந்திருந்தவிடம் மிகவும் குறுகலானது...
வேறுவழியில்லை உரசிக்கொண்டுதான் உட்கார்ந்திருக்க
வேண்டும்.
அவள் வேகமாக ஓடிவந்ததால் மூச்சும் வேகமாகயிரைத்தது.
கன்னத்தை வெட்பம் உரசியபோதும் கண்களில் பீதியோடுவே
இருந்தாள்
அவள் கைகளை அழுத்தமாகப் பிடித்தேன் 'பயப்படாதே நான்சி'
சத்தம் வராமல் சிரித்தாள்...' நானொன்று கேட்கட்டுமா?'
என்றவள்
உதட்டை சமிக்ஞையாக்கினாள்
சூடு உடலில் பரவும் போது அவள் நெற்றியிலிருந்து
இரத்தம் வழியத் தொடங்கியது
பூட்ஸ் சப்தங்கள் மெல்ல எங்களை நெருங்கிக் கொண்டிருந்தன...
இறுகப் பற்றியிருந்த நான்சியின் கையில் உரிமையின்
அடையாளமிருந்தது
இப்போதுதான் நினைக்கிறேன்
பயந்து ஒளிந்ததற்குப் போராடியிருக்கலாமென்று...
- மு.முகமது பாட்சா*
12/07/2018

No comments:
Post a Comment