
உயிரற்ற சடலத்தை
ஒன்பதுபேர் சூழ்ந்திருக்கிறார்கள்
ஒப்பாரியின் ராகங்கள் மாறுகின்றன
மேற்கில் சூரியன் பிறக்கும்போது
கல்லறைகள் பிளக்கலாம்
நிதானம் குழியின் வழி மூச்சுவிடுகிறது
விசும்பல்களை
யாரும் சேமிப்பது கிடையாது
இந்த அழுகை
எப்போதும்போல் போலியானது
பூக்களின் ஆடம்பரம் வெற்றுக் கௌரவம்
கல்லறை வாசகங்கள் காட்சிக்கு மட்டும்
கை கொடுத்துவிட்டு இறங்குங்கள்
பயணத்தை மற்றவர்கள் தொடரட்டும்.
- மு.முகமது பாட்சா*
13 /07 /2018
No comments:
Post a Comment