Wednesday, 11 July 2018

நுண்புனை கதைகள் 8


நுண்புனை கதைகள் 8

கிணற்றுத் தவளைகள்
தானியங்கு மாற்று உரை இல்லை.
அளந்து முடிந்தவிடத்தை மீண்டும் அளந்தார்கள். 
இப்போதும் வீட்டோடு அந்தக் கிணறும் சாலை அபகரிப்பிற்கு ஆளாகியே நின்றது. 
அந்தக் கிணற்றின் ஊற்று எப்போதும் குறைந்ததேயில்லை... 
சுவையும் குறைத்ததில்லை 
கிணற்றை மட்டுமாவது காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியே அடைந்தன 
மூடுவதைத்தவிர வேறுவழியில்லையென்று கைவிரித்துவிட்டார்கள் 
நீரென்பது எவ்வளவு அத்தியாவசியமானது ! ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? 
அபிதாவின் கண்ணீர்த்துளி கிணற்றில் விழுந்த போது 
கிணறு சற்றே சிலிர்த்தது... 
அங்கிருந்த தவளையொன்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. 
அதன் கண்ணீரை யாரும் பார்க்கவில்லை... 
இந்தக் கிணற்றை நம்பித்தான் எத்துணைச் சிற்றுயிர்கள் வாழ்கின்றன! 
இரவு மணி 12 .௦௦ இருக்கும் 
தவளையின் சப்தம் ஆக்ரோசமாய் எழுந்தது... 
இப்போது ஆங்காங்கே தவளைகளின் சப்தங்கள் வானளாவ உயர்ந்தன 
அளவிட வந்தவர்களின் அலறல் சப்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்தார்கள் 
ஆச்சரியம் தாங்க முடியவில்லை 
லட்சக்கணக்கான தவளைகள் கிணற்றை ஆக்கிரமித்திருந்தன. 
அளவீட்டார்கள் ஒவ்வொருவரையும் அவை ஒவ்வொன்றும் ஆக்ரோசமாகத் தாக்கின... 
ஒரு தவளையின் எடை எப்படியும் 50 அல்லது 60 கிலோவிருக்கலாம். 
தவளைகளை அழிக்க இராணுவ உதவிக் கோரப்பட்ட நேரத்தில் 
பாம்புகள் ஒவ்வொன்றும் நகரத்திற்குள் மெல்ல நுழையத் தொடங்கியது....

- மு.முகமது பாட்சா* 
11 /07 /2018

No comments:

Post a Comment

Popular Posts