
வெளிச்சம் கண்களை மூடிக்கொள்ள
சதைத்தோல் மிருகங்கள் உலாவுகின்றன
மூத்திரம் நாவில் வழிகிறது
முடை நாற்றம் முகர்ந்து பறிக்க
வாய்பேசா பிறை நிலா சிதைந்து கிடக்கிறது
யோனிக்கு மலர்த்திய பசியில்
ஒரு தாய் ஆடையவிழ்ந்து கிடக்கிறாள்
எத்துணை நரிகள்தான் எச்சில் செய்யும்?
என் சேயிற்கு என்ன சொல்வேன்?
புதைகுழி சகதிக்குள் அவள் சிக்கியிருக்கிறாள்
புண்ணியமாகப்போகும்
அவளை மேலும் சிதைத்துவிடாதீர்கள்
இனி எழுந்து வரும் தீர்ப்பாவது
எலும்பில்லா
மிருகங்களை நசுக்கித் தொலையட்டும்...
- முகமது பாட்சா*
17/07 /2018
No comments:
Post a Comment