Monday, 16 July 2018

பூத்திருக்கிறேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம் மற்றும் வெளிப்புறம்

வெறுப்பான வார்த்தைகளைக் கொண்டு 
திரைச்சீலை நெய்கிறாய் 
உன் வருகைக்காகவே 
சன்னோலரத்தில் பூத்திருக்கிறேன் 
சில நூற்றாண்டின் முத்தங்கள் 
நம் மூளைகளில் ஒட்டியிருக்கின்றன 
பார்வையால் முத்தமிட்டபோதே 
பள்ளத்தாக்கில் 
விதைகள் முளைக்கத் தொடங்கிவிட்டது 
நேசமென்பது பட்டுப்பூச்சிகளின் கூடு 
இதயத்திலிருக்கும் 
கால்தடங்களை எப்படி அழிப்பேன்? 
நிழலைப் பிடித்து நிஜமென்கிறாய் 
நிஜம் 
உன் வாசலில்தான் பூத்துக்கிடக்கிறது 
வெளியே வந்து எட்டிப்பார் 

- மு.முகமது பாட்சா* 
16 /07 /2018 

No comments:

Post a Comment

Popular Posts