
என் தோள்களில் சாய்ந்து கொள்கிறேன்
என் விரல்கள்
என்னைக் கிள்ளி முத்தமிடுகின்றன
என் பார்வையில்
என்னைச் சிறைவைத்துக் கொள்கிறேன்
என் என்பது
என் இல்லா வட்டங்களின் நீர்க்குமிழி
என் எங்கேயோ தொலைந்து போகவில்லை
என் அருகில்தான் என்னுடைய நான்
என் கதையின் பிரதி என் நிழல்
என் சொல்வாடைகளில் என் சொப்பனம்
என் சுயம் என் சமாதி
என் கையைப் பிடித்து நடக்கிறேன்
என் வீடு நான் விடையறியாத மர்மம்
என் எனக்குள்ளிருக்கும் பெரும் எழுச்சி
என் எனக்கான துயரம் என் ஆசை
என் கண்ணீர் எனக்கான கதைகளின் மழை
என் என்னோடு பேசுகிறேன்
என் என்னோடுவே உறங்குகிறேன்
என் என்பது நிச்சயம் நானில்லை! ஆனாலும்
என் என்பது என்றும் என்னோடுதான்.
- மு.முகமது பாட்சா*
06 /07 /2018
இந்தக் கவிதையை உடனே மொழியாக்கம் செய்தளித்த நண்பர் Sri N Srivatsa அவர்களுக்கு நேசத்துடன் நன்றிகள் !
My shoulders
I lean on
My fingers
pinch and kiss me
My sight
is where I
imprison myself
My
is the ripple of
my non-existent circles
My is not lost
somewhere
My is right next to
my me
My story's copy is
my shadow
My dreams are in
my wordplays
My self is
my grave
My hand I hold and walk
My home is
my unsolved mystery
My is the big uprising inside me
My sorrow for meare
my wishes
My tears are the rain for
my stories
My conversations are with
my self
My slumber is with me for company
My is definitely not me
but
My is always with me
~Sri 11:47 :: 06.07.2018 :: Noida
No comments:
Post a Comment