அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான்
வாசலை இடித்துவிட்டுச் சுவரெழுப்பினான்
சன்னல் திரைகளைக் கனமாகப் போட்டான்
தொட்டில் மீன்களைத் தரையில் விட்டு இரசித்தான்
அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான்
காடுகளை வெட்டி சாலை போட்டவன்
கால்வாய்களை வெட்ட மறந்தான்
வெள்ளம் ஊருக்குள் நுழைந்து உணவருந்தியது
அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான்
ஆதாரில் இருப்பது தானில்லையென்றான்
தனது நாடும் இவ்வுலகில் இல்லையென்றான்
குழிக்குள் விழுந்தவன் எழுந்திருக்க மாட்டாமல்
அந்த ஓவியத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான்
- மு.முகமது பாட்சா*
24 /07 /2018
No comments:
Post a Comment