Saturday, 21 July 2018

இருட்டு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் இரவு


இருட்டின் வெளிச்சம் அலாதியானது 
நிழலில் நிழலை இரசிக்கலாம் 
என்னெதிரில் நான் எதிர்ப்படுகிறேன் 
மரங்களின் பேச்சுகள் சுவாரசியமானது 
விரக்தியின் ஆன்மா இறந்து கிடக்கும் 
பயமற்றது இருட்டு 
பாயும் துணிச்சல் இருட்டு 
உறக்கத்தின் மொழியே இருட்டுதான் 
வெளிச்சமென்று எதைச் சொல்கிறாய்? 
கண்மூடினால் பதுங்கிக் கொள்வதையா? 
அத்துணை அண்டங்களையும் 
அதிசயமாகக் காட்டுகிறது இருட்டு 
இருட்டிற்குள்ளிருந்துதான் சொற்கள் பிறக்கின்றன 
இருட்டிற்குள் பிணைகிறது ஒரு பிரபஞ்சம் 
பிரபஞ்சத்தின் இசை இருட்டு 
இருட்டிற்குள் கண்மூடி யோசிக்கிறேன் 
என் நிழல் என்னை அணைக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
21 /07 /2018 

No comments:

Post a Comment

Popular Posts