Sunday, 29 July 2018

எந்தன் முகம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இதுதான் 
உந்தன் முகமா? என்று கேட்டார்கள் 
இதுவும் என்றேன் 
ஏனிப்படியென்று? எள்ளிப் பார்த்தார்கள் 
ஆகா! 
இஃது ஆகாத முகமென்றார்கள் 
முகத்தில் பருக்கள் அதிகமென்றார்கள் 
வீசியெறிந்துவிட்டு வா 
நல்ல முகம் 
நான் தருகிறேன் என்றார்கள் 
கடை விரித்து 
முகங்களையும் காட்சியாக்கினார்கள் 
ஒவ்வொரு முகமும் 
புறணிகள் பேசிக் கொண்டிருந்தன 
ஆதாயத்திற்காக ஆமாம் போட்டுக் கொண்டன 
காற்று வந்த திசைகளில் கண்ணடித்தன 
அழகான முகங்கள்தான் 
ஆனாலும் அதனியக்கம் அவையிடமில்லை 
என் முகம் என்னைப் பார்த்துச் சிரித்தது 
எந்த முகம் வேண்டுமென்று 
என்னையே கேட்டது.... 
சொந்த முகம் நீ போதுமென்று 
சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினேன் 

- மு.முகமது பாட்சா* 
29 /07 /2018 

No comments:

Post a Comment

Popular Posts