
தலைப்புச் செய்திகளை
எல்லோரும் தேடித் தேடி வாங்குகிறார்கள்
அதுவாக இருக்கக்கூடாதென்று
பலரின் மனம் அடித்துக் கொள்கிறது
சிலர்
அதுவாகத்தான் இருக்க வேண்டும்
என்பதற்காகவே வாங்கித் தேடுகிறார்கள்
ஆங்காங்கே சிலர்
குப்பைகளைக் கொளுத்திக் கொண்டிருக்க
கண்ணீர் துளிகள்
அவற்றை அணைத்து விடுகின்றன
நிழல் தந்த மரமொன்று படுத்துகிடப்பதாக
ஒருவன்
புலம்பிக்கொண்டே செல்கிறான்...
பறவைகள்
அங்கேயே முகாந்திரமிட்டு இருக்கின்றன
காற்றுவரட்டும்
கலைந்து போங்கள் என்று சொன்னாலும்
அஃதெப்படி சாத்தியமாகும்?
முதிர்ந்த மரம்தான் அஃது என்றாலும்
பறவைகளுக்குத் தாய் வீடல்லவா?
வேர்களில் கண்ணீர்த்துளிகள் விழுந்து
ஈரம் கூட்டலாம்
சின்ன இலைகள் இனியும் துளிர்க்காதா ?
பறவைகளின் ஏக்கம் மெய்யாகட்டும்.
மு.முகமது பாட்சா*
28 /07 /2018
No comments:
Post a Comment