Saturday, 21 July 2018

நுண்புனை கதைகள் 11

நுண்புனை கதைகள் 11

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப் மற்றும் வெளிப்புறம்
ஏழைத்தாய் 

'நீங்கள் இந்த மகனின் தாயா?' 
'ஆம் நீதி அவர்களே நான் அவரின் ஏழைத்தாய்' 
'என்னது ஏழைத்தாயா?' என்று வியந்த நீதி 
அவரின் மகனைப் பார்த்து 
'எதற்காக இவரை இப்போது கூண்டிலேற்றினீர்கள்?' 
'ஐயா கணம் நீதி அவர்களே! இவர் ஏழைத்தாயென்பதால் 
மற்றவர்களின் கண்களைப் பார்க்கவே கூசுகிறது..." 
'ஏன் அப்படி?' 
'நான் ஏழைத்தாயின் மகனென்பதால்... 
தாழ்வு மனப்பான்மையில் குறுகிப்போகிறேன்' 
'அதற்காக இந்தத் தாய் என்ன செய்வார்?' 
'இந்தக் குற்றச்சாட்டிற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தாயே?' 
'இவர் மகாப் பொய்யர் ஐயா!' 
'எப்படிச் சொல்கிறீர்கள்?' 
'இவர் இப்போது கோடீசுவரர்...' 
'இருந்தாலும் அவருக்குக் கில்டி இருக்கத்தானே செய்கிறது?' 
'இவர் இப்போது பார்ப்பதெல்லாம் 
கோடீசுவரர்களின் கண்களை மட்டும்தான் ... 
ஏழைத்தாய்களின் கண்களைப் பார்ப்பதற்கு மிகவும் கூச்சப்படுகிறார்!' 
'உண்மையாகவா!' என்று வியந்த நீதி 
'நீங்கள் இந்தத் தாயை கட்டி அணையுங்கள்' - என்று கட்டளையிட்டார் 
'மன்னிக்க வேண்டும் நீதி அவர்களே, எனது உடை 
உலகில் மிகவும் விலை உயர்ந்தது கசங்கிவிடும்...' 
'சீமான்களைத் தழுவும் போதும் கசங்கத்தானே செய்யும்?' 
'அங்கு ஆடைகள் விளையும்...இவரின் அழுகை கரையாக்கிவிடும்' 
'அதற்காக என்ன செய்யலா'ம் 
'நாட்டில் ஏழைத்தாய்களே இல்லாமல் .....' 

'நீயூஸ் கேட்டுகிட்டே தூங்கறத பாரு! வெளங்கிடும்' என்ற அவனது அம்மா 
'டீக்கடையில கிளாஸ் கழுவுற வேலையிருக்காம் 
உன் இஞ்சினியர் படிப்புக்கு இதுவொன்னும் குறைச்சலில்ல 
போய் என்னான்னு பாரு....' 

- முகமது பாட்சா* 

No comments:

Post a Comment

Popular Posts