
வெள்ளைத் தாளின் அருகில்தான்
அந்தத் தேநீர் கோப்பையும் அமர்ந்திருந்தது
அதுவும் காலியாகத்தான் இருந்தது
அங்கிருந்த நாற்காலி எப்போதோ
இறந்துவிட்டதாக இரண்டும் பேசிக் கொண்டன
எழுதாத பேனா ஈரமிழந்தததால்
அதுவும் அப்போதே இறந்திருக்கலாம்...
நீ எழுதப்பட்டிருந்தால் என்னருகில்
இருந்திருக்க மாட்டாயோ? என்றது கோப்பை
கவனித்தாயா
இன்னமும் அந்த மூச்சுக் காற்று
இங்குதான் சுற்றிக் கொண்டிருக்கிறது
அதனால்தான் இன்னமும் படபடக்கிறேன்
காற்றொன்று சன்னலை தடதடக்க
கோப்பை சிதறிக் கீழே விழுகிறது
பறந்த வெள்ளைத்தாள் சுவரில் ஒட்டிக் கொள்ள
ஒரு பூனை மெல்ல நகர்கிறது
காட்சி ஓகே டேக் போகலாம் என்ற போதுதான்
அதுவும் கூட நிகழ்ந்தது
வெள்ளைத் தாளில் யாரோ எழுதியிருந்தார்கள்.
- மு.முகமது பாட்சா*
30 /07 /2018
No comments:
Post a Comment