Monday, 23 July 2018

வெளிச்சம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

கழுகுகள் கொத்தி முடித்ததும் 
பொன்னாடைகள் போர்த்தப்பட்டது 
வலிகளை 
தொடைகளுக்கு நடுவில் மறைத்துக் கொண்டாள் 
புன்னகையை 
கவ்விக் கொண்டன காமிராக்கள் 
வார்த்தைகளை ஒழுகவிட்டு முத்தம் வீசினாள் 
கண்களைக் கவ்வி கொண்டிருந்தான் ஒருவன் 
கைவிரல் பட்டதில் மழை பெய்தது ஒருவனுக்கு 
வெற்றிப் படத்தின் பாராட்டுவிழா 
அமைச்சர் தேதி கேட்டுக் கொண்டிருந்தார் 
படத்தின் பெயர் 
'ஒரு நடிகை ஊர்வலம் போகிறாள்'

- மு.முகமது பாட்சா*
23 /07 /2018

No comments:

Post a Comment

Popular Posts