Wednesday, 28 August 2019

7 வார்த்தைகள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

7 வார்த்தைகளை எடுத்து வைத்துக் 
குலுக்கிப் போட்டு எடுத்தான்

தீ நாக்கு எரிகிறது 
கனவு கானல் வெளிச்சம் மழை

மீண்டும் குலுக்கி எடுத்தான்

கானல் நாக்கு மழை கனவு 
தீ வெளிச்சம் எரிகிறது...

கலைத்துப் போட்டு எடுத்தான்

கானல் தீ எரிகிறது 
மழை நாக்கு வெளிச்சம் கனவு

மற்றுமொரு முறை முயற்சித்தான்

எரிகிறது கனவு வெளிச்சம் மழை 
கானல் தீ நாக்கு

இறுதியாக 
இதுதான் வாழ்க்கை என்று கவிதையை 
முடித்துவைத்தான்.

- முகமது பாட்சா*
28/08/2019

No comments:

Post a Comment

Popular Posts