Tuesday, 6 August 2019

இராம காவியம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

காகம் கொத்தித் தின்ற பிணத்தினருகே 
ஓர் இராமகாவியம் ... 
ஶ்ரீராம் ஜெபம் மறுத்து 
அகலிகை மீண்டும் கல்லாகிப் போனாள் 
அனுமன் தன் இதயத்தைக் கிழித்து 
இராமனை மெல்ல இறக்கிவைத்துவிட்டு 
நடந்து செல்கிறான்.... 
குகனின் மறுதலிப்பில் மனமுடைந்த இராமன் 
இறங்கிச் சென்ற பூமி முழுவதும் 
பிணக்குவியல்.... 
உதிரம் சுவைக்கும் நாய்கள் 
கோஷம் இட்டுக் கொண்டிருக்கின்றன 
ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் 
கூனி வாய்விட்டு சிரிக்கிறாள். 
முதன் முதலாகப் புன்னகை மறந்த ராமனை 
வரைகிறான் ரவிவர்மா.

- முகமது பாட்சா*
ஓவியம் உதவி: Ravi Palette

செய்தி: உத்திர பிரதேசத்தில் அப்துல் காலித் என்ற 18 வயது சிறுவனை 
ஜெய் ஶ்ரீராம் சொல்லவில்லையென்று சங்கிகள் மண்ணெண்ணெய் 
ஊற்றி எரித்து கொன்றுவிட்டனர்...

No comments:

Post a Comment

Popular Posts