
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது
சற்றென்று கடந்து போகிறாய்..
உனது பக்கங்களை
அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன்...
அவை தீராத பக்கங்கள்...
எனது தேநீர்
நீயருந்திய மிச்சமாக இருக்கிறது...
என் சுதந்திரத்தை
உன் கையில் வைத்து
இசைத்துக் கொண்டிருக்கிறாய்...
என்னைத் தேடி உன்னைத் தேடுகிறேன்...
அவர்கள் சென்றபிறகும்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்...
என்னதான் பேசினோம் என்று...
நீயோ சற்றென்று கடந்து போகிறாய்.
- மு. முகமது பாட்சா*
18/08/2019
No comments:
Post a Comment