
வாளையுருவி
தைத்தவனின் கழுத்தைத் துண்டித்தவன்...
ஆக்ரோஷமாகச் சிரித்தான்...
தலை துடித்துக் கொண்டிருந்தது
மிகவும் நன்றாக இருக்கிறது இல்லையா ஹீப்ரு
ஆடை சிரித்துக் கொண்டிருந்தது...
ஹீப்ரு உனக்குத் தெரியுமா?
கொலை செய்வதை இரசிக்காதவன்
பிணத்திற்கு நெருக்கமானவன்...
அழுகையைக் கண்டு ஆனந்தப் படு
துயரம் உன்னைவிட்டு விலகிவிடும்...
கோழைகள்
தானாக உருவாக மாட்டார்கள்...
நாம்தான் உருவாக்க வேண்டும்...
அரசுக்கு எதிராகக் குரலெழுப்பினால்
உணவைப் பறித்துவிடு
பட்டினிக்கிடந்து செத்துத் தொலையட்டும்...
வனத்திற்குள் உலாவு
மிருகங்களின் வேட்டையைக் கற்றுக் கொள்வாய்...
பதவியென்பது ஒருதடவைதான் வரும்
வந்த பின் போகவிடக்கூடாது
கடவுளாக மாறிவிட்டால்
பக்தர்கள் நம்மிடம்தான்
பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள்....
ஹீப்ரு
உன்னைச் சுற்றியும் எனது கண்கள்
உலாவிக் கொண்டிருக்கின்றன மறந்து விடாதே!
குரோதி
தன் வாளால் சிறு கீறல் போட்டு
ஹீப்ரூவை எச்சரித்தான்.
- மு.முகமது பாட்சா*
31/07/2019
No comments:
Post a Comment