Tuesday, 6 August 2019

உங்களுக்குத் தெரியுமா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தொப்பி மற்றும் குளோஸ் அப்

உங்களுக்குத் தெரியுமா? 
படுக்கையறைக்குள் 
பூனைகள் எப்போது நுழையுமெனத் தெரியாமல் 
கட்டி அணைப்பதைப் பற்றி...

உங்களுக்குத் தெரியுமா? 
வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பும் வரையில் 
மடியில் நெருப்புக்கனல் தகிப்பதைப் பற்றி...

உங்களுக்குத் தெரியுமா? 
பால் மடி மறக்காத மழலைகள் 
இரத்த மடிகளில் உறங்குவதைப் பற்றி...

உங்களுக்குத் தெரியுமா? 
பெல்லட் குண்டுகளால் 
சிதைந்துபோன வாழ்க்கையைப் பற்றி...

உங்களுக்குத் தெரியுமா? 
எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் 
பூட்ஸ் கால்களின் சப்தங்களைப் பற்றி...

நீங்கள் நனைந்தாவது இருக்கிறீர்களா? 
துப்பாக்கி குண்டுகளின் 
இடைவிடாத மழை வெளிகளில்...

இருந்திருக்க முடியாது 
அப்படி நேரும்போது நீங்களும் கூடப் பேசுவீர்கள் 
உரிமைகளைப் பற்றி.

- முகமது பாட்சா*
05/08/2019



----------------
நீங்கள் 
துப்பாக்கிக் குண்டுகளை
நிரப்பிக் கொண்டிருந்த போது
நான் 
தக்காளி ரசம் வைப்பதைப் பற்றிப்
படித்துக் கொண்டிருந்தேன்
நீங்கள் எனக்குக் கொடுத்த செய்தி
இது மட்டும்தான்

- முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts