
மூளைக்குள்ளமர்ந்து
இரவை வியாபித்துக் கொண்டிருக்கிறாய் !
அதனுள்ளிருக்கும் வெப்பம் தாங்காமல்
சூரியன் நழுவியிருக்கலாம்...
தவறான சங்கீதங்களை
விரல்கள் மீட்டிக் கொண்டிருக்க..
பித்தனாக உலறிக் கொண்டிருக்கிறேன்...
தேவதாருவென உன் தணல் எழுகிறது..
உருகி விழும் பிதற்றல்களைக் கோர்த்து
மாலையாக அணிந்து கொள்கிறேன்...
சிறகுகளை எரித்துவிட்டு
முத்தப்பித்தங்களை மூளைக்குள் சொருகுகிறாய்..
விடிவதற்குள்
விலகிக்கிடக்கும் ஆடைகளையும் எரித்துவிடு...
நீ குளிர்ந்திருக்கும்போது
என் மூளையுருக்கு இறுகி உறைந்திருக்க...
அவாந்திரைக்குள்
கருவாய் நான் உருண்டிருப்பேன்..
ஜென்ம விடியலுக்கு
உன் உதிரத் தீட்டு இனி சாம்பல் பூக்கலாம்.
- மு.முகமது பாட்சா*
29/08/2019
No comments:
Post a Comment