
அவன் என்னைப் பின் தொடர்ந்து வருகிறான்....
நான் நிற்கும் போது
முகம் திருப்பி வேறெங்கோ பார்க்கிறான்..
அவனை இதுவரை பார்த்ததில்லை...
அவன் பார்த்தவன் போல் சிரிக்கிறான்...
பொறுமையிழந்து வாய்விட்டுக் கத்துகிறேன்...
அவன் அழுது கொண்டிருக்கிறான்...
நீ யாரென்று கேட்கிறேன்...
வைத்த கண் விலகாமல் பார்த்தவன்
கனவு என்று சொல்லிவிட்டுக் கட்டித் தழுவுகிறான்
அவன் தேகம் உடைந்துருகுகிறது
நான் விதிர்த்தெழுகிறேன்
இருட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.
- மு.முகமது பாட்சா*
09/08/2019
No comments:
Post a Comment