வீரமாக வா!

போராட்டங்கள் உன் கூடப் பிறந்தவை
போய்வா தலைவா என்று அனுப்பிவிட்டோம்
நீ போனபிறகுதான்
உண்மையிலிங்கு தவிக்கிறோம்...
நீ கற்றுக் கொடுத்தவற்றைக்
காப்பகத்தில் பத்திரமாக வைத்திருக்கிறோம்
எடுப்பதற்குத்தான்
இன்னமும் எங்களுக்கு நேரம் வரவில்லை...
உன் முத்தமிழ்
இன்னமும் எங்களுக்குள் மூழ்கி
முத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது...
நாங்கள்தான் தொலைத்துவிடப்
பாசிசத்தின் வாயில்
கைவிட்டுத் துழாவிக் கொண்டிருக்கிறோம்...
நீ சிறகுகளைக் கொடுத்தாய்
நாங்கள் அதைப்
பதுங்கிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறோம்...
எதிர்த்து நிற்க கற்றுக் கொடுத்தாய்..
ஏளனத்தை ஏற்புடன் வாங்கிக் கொள்கிறோம்...
எப்போதுதான் வரப்போகிறாய்?
எங்களுக்குள் விளைந்து நிற்கும் வீரமாக நீ!
- மு. முகமது பாட்சா*
07/08/2019
கலைஞர் முதலாமாண்டு நினைவஞ்சலி
No comments:
Post a Comment