
அடிபட்ட நாயைத் தூக்கிச் சென்ற
அதே தெருவில்தான்
ஒருவன் கைவெட்டுபட்டு ஓடுகிறான்...
ஒருவனின்
உடைகளைக் கழற்றிவிட்டு
ஓங்கி உதைத்துக் கொண்டிருந்தார்கள்...
அவன் விளையாட்டாக
சிரித்துக் கொண்டிருப்பதாகச்
செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார்கள்...
காவல்துறைக்குச் செல்லும் வழியில்தான்
கார் மோதி இறக்கிறாள்
கற்பழிக்கப்பட்ட அந்தச் சிறுமி....
சிறையிலும் போராடியவன்
வெளியில் வரும் போது
வயிற்று வலியோடு வாந்தி எடுக்கிறான்...
செய்திகளை வாசிப்பது
உங்களின்
உண்மையான கார்ப்ரேட் கம்பெனி.
- மு.முகமது பாட்சா*
01/08/2019
No comments:
Post a Comment