
மற்றவர்கள் போல் நானும் கடந்த போது
அந்த ஓவியம் கண்சிமிட்டியது...
அதன் விழிகளில் தெரிந்த விளக்கில்
நான் தலைகீழ் பிம்பமாகத் தொங்குகிறேன்...
அருகிலிருந்த இரண்டு ஓவியங்கள்
என்னை முறைத்துக் கொண்டிருந்தன...
பின்னாலிருந்த ஓவியம்
இங்கிருந்து நகர்ந்துவிடு என்று எச்சரித்தது...
நகர முயற்சிக்கிறேன்...
அது தன் ஆடைகளை மெல்லக் களைய...
வா என்று உதடுகள் அசைந்த போது
அவள் உடையிலிருந்த பட்டாம் பூச்சியின்
உயிரில் கலந்து சிறகுகளைப் படபடக்கிறேன்......
என்னருகில் நின்றவள்
வா சீக்கிரம்
கூடத்தை மூடப் போகிறார்களாம் என்றாள்...
அருகிலிருந்தவளுக்கு அவளின் முகம்
-மு.முகமது பாட்சா*
08/08/2019
No comments:
Post a Comment