
ஐநக்ஸ் மாலில்
அஞ்சப்பர் மீன் குழம்பு சாப்பாடு
ஹிக்கிம் போதம்ஸில்
காஃபியோடு சின்னதாக உறக்கம்
சிக்னலின் அழுக்கு கைகளை உதறிவிட்டு
முகம் சுளித்தல்
பெட்ரோல் க்யூவின் ஆட்டோக்களைச் சபித்து
அரைவட்டமடித்து
அடுத்த நிலையம் நுழைதல்...
இராத்திரிக்குக் காண்டத்தோடு
பெடிகிரியும் பீட்ஸாவும் ஆர்டர்...
விடிந்ததும்
காலையில் கையில் ஹிந்து பேப்பர்...
இவர்களுக்கெல்லாம்
எப்போதுமே நல்லாட்சிதான் நடக்கிறது.
- மு.முகமது பாட்சா*
27/08/2019
No comments:
Post a Comment