
ஒரு கவிதையின் பின்னால்
என்னவெல்லாம் இருக்கக் கூடும்...
ஒழுகிய சிலதுளி மை
ஒரு தூவல்
வெள்ளையாக இருந்த தாள்
கொஞ்சம் சிந்தனை
இத்துடன் சிலதுளி நேரங்கள்...
அல்லது
கொஞ்சம் மின்சாரம்
கொஞ்சமாய் விரல்களின் ஸ்பரிசம்
விசைப்பலகைக் கணினி
கொஞ்சம் சிந்தனை
இத்துடன் சிலதுளி நேரங்கள்...
அல்லது
கொஞ்சம் வெட்டிப் பொழுது
வாசிக்க இயலா அலுப்பு
கொஞ்சமாய் வார்த்தைகள் திருட்டு
இத்துடன் சிலதுளி நேரங்கள்...
அல்லது...
நானென்ற கர்வம்
குளிர்ச்சியாக மது
கொஞ்சமாய்ப் புகழ் போதையில் மயக்கம்
இத்துடன் சிலதுளி நேரங்கள்.
- மு.முகமது பாட்சா*
20/08/2019
No comments:
Post a Comment