
கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு
விளையாடச் சொல்கிறார்கள்...
ஆசிட்தான் அழுக்கை எடுக்குமென்று
கண்களில் ஊற்றிவிட்டு
காட்சிகள் தெரிகிறதா? எனக் கேட்கிறார்கள்...
சுதந்திரம் என்பது
சுவாசிப்பதற்கான அனுமதி மட்டும்தான் என்பது
அவர்களின் வாதம்...
எழுதாதக் கதைகளை எழுதியவர்கள்
இதுதான் இனி சரித்திரம்
என்றபோது வியந்து போனோம்...
வீடுகளை விட்டு வெளியேற்றி விட்டு
வீடில்லாதவர்களுக்கு நாடில்லையென்றபோது
அகதிகளின் முகாம் மூடப்பட்டிருந்தது...
அழுகைகள் விலைபோவதில்லை...
கேள்விகளின் கூடாரத்திலும் ஆயிரம் பொத்தல்கள்
ஆகாயம் நிர்வாணமாக இருக்கிறது
பொருமல்கள்
பூமிக்குள் ஊடுருவி வேர்களைப் பரப்புகின்றன
என்றாவது ஒரு நாள்
அவை
எங்களுக்காக வெடிக்காமலாப் போகும்?
- மு.முகமது பாட்சா*
06/08/2019
No comments:
Post a Comment