Wednesday, 21 August 2019

வார்த்தைகள் சீட்டாட்டம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், உட்புறம்

இதனை 
அறை என்று சொல்வதைவிடச் 
சிறையென்று சொன்னால் சரியாக இருக்கலாம்... 
முகங்களில்லாமல் 
உரையாடிக் கொண்டிருக்கிறோம்... 
எழுத்துகளைக் 
கலைத்துப்போட்டு அடுக்குவதுபோல் 
வார்த்தைகளைச் சீட்டாடுகிறோம்... 
ரம்மி சேராதது போல் 
பேச்சுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன... 
பசியின் நேரம் நெருங்கியதால் 
காரம் தூக்கலாகி 
வார்த்தைகள் எரிச்சலடைந்தது... 
எந்தவொரு வார்த்தையும் 
எங்களின் தாகத்தைத் தணிக்கவேயில்லை... 
கோபமான வார்த்தைகள் 
சூழ்ந்து கொண்ட அறையில்... 
துப்பாக்கிகள் செய்வதைத் தவிர 
வேறு வழி தெரியவில்லை... 
சற்று முன் தான் ஒருவரையொருவர் 
சுட்டுக்கொண்டு இறந்தோம்... 
எங்களைத் தேடிக்கொண்டிருப்பதாகச் 
செய்திகளை நீங்கள் கேட்டால் 
அவை பொய்யான செய்திகள் மட்டுமே.

- மு.முகமது பாட்சா*
19/08/2019

No comments:

Post a Comment

Popular Posts