Wednesday, 28 August 2019

மரங்களின் முறிவு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

காற்றை அசைத்துவைத்து 
இலைகள் அசைகிறதா என்று கவனிக்கிறாய்..
நிழல்கள் அசையும் போது 
இல்லாத காற்றைத் 
தேடிக்கொண்டிருக்கிறது மனம். 
பிரபஞ்ச கூட்டல் கழித்தல் கணக்குகளில் 
விடைகள் விசித்திரமாக இருக்கின்றன... 
எழுதி நிரப்பிய பக்கங்களில் 
ஒரு நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது.. 
தொலைவிற்கு அருகில் அமர்ந்துகொண்டுதான் 
ஒப்பனைகள் தளிர் பாட்டுகள் பாடுகின்றன. 
வரைந்த சிறகுகளில் கனவுகள் ஒட்டிக்கொள்ள 
வானம் வசமிழந்து நழுவும் வேளையில் 
பிரபஞ்ச மூச்சுக்காற்றைச் 
சூறாவளியென ஒப்புவித்துக் கொண்டிருக்கிறாய்.. 
வனம் பற்றியெரியும் போது.. 
மரங்களின் முறிவை 
சங்கீதமாக ரசித்துக் கேட்கலாம்.. 
அதில் கருகிக் கிடப்பது
நம் அனைவரின் மூச்சுக்காற்றும்

- மு.முகமது பாட்சா*
25/08/2019

No comments:

Post a Comment

Popular Posts