
நானாக நீயும்
நீயாக நானென்றும்
எத்தனை காலம்தான் தொடர்வது?
நான் பூனையாகவும் நீ கிளியாகவும்
மாறி
ஒருவரையொருவர் அலைக்கழிப்போம்...
என்னைக் கொத்தித் தின்னும்
கழுகாக மாறும் போது
எலியாக மாறி அவதாரமெடுக்கிறேன்..
நீ நதியாக இரு
நான் மீனாக நீந்துகிறேன்...
நீ பேயாக விரட்டு
பயந்தான்கொள்ளியாக ஓடுகிறேன்...
நீ மானாகச் சாயும்போது
நான் புலியாக உன்மேல் இருப்பேன்...
எல்லாம் முடிந்ததும்
நீ நீயாகவும் நான் நானாகவும்
முத்தங்களைப் பறி மாறிக் கொள்ளலாம்.
- மு.முகமது பாட்சா*
09/08/2019
No comments:
Post a Comment