
அந்தச் சுமைதாங்கிக் கல்லை
அகற்றிக் கொண்டிருந்தார்கள்...
சாலை விரிவாக்கம் என அதிகாரி சொன்னான்
தூரத்திலமர்ந்து
நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருந்தார்கள்..
ஒரு நாய் ஏக்கத்துடன்
கல்லைப் பார்த்துவிட்டு நகர்ந்தது..
பக்கிரி எப்போதும்
அதன் மீதுதான்
மூட்டையை வைத்துவிட்டு உறங்குவார்...
பள்ளி நாட்களில்
நாங்களும் ஓடித் தாண்டி மகிழ்வோம்...
பொக்லைன்
சிரமப்பட்டுத் தூக்கி எறிந்த போது...
அதன் அடி மனையில்
ஈர ரத்தம் ஒட்டிக் கொண்டிருந்தது...
அறுந்த தொப்புள் கொடியுடன் பெருமாயி
அழுது அலைந்து கொண்டிருப்பதாக
ஊரில் பேசிக் கொள்கிறார்கள்.
- மு.முகமது பாட்சா*
18/08/2019
No comments:
Post a Comment