
ஒரு கடவுச் சொல்லிற்குள் இருந்துதான்
தாத்தாவை மீட்டிருந்தேன்...
இளைத்தவராகவும் அதே இருமலுடன்
வந்து அமர்ந்தார்
அப்பாவிற்கான கடவுச் சொல்லில்
சிறிது பழுதிருந்ததால்
வெளிவருவதில் சிரமம் அதிகமாக இருந்தது
தாத்தா சொன்ன குறிப்புகளுடன்
அவரையும் மீட்டெடுத்தேன்...
மூவரும் அமர்ந்து தேநீர் அருந்தினோம்...
மூன்று கால இடைவெளிகளைப்
பேச்சுகளால் நிரப்பிக் கொண்டோம்...
அங்கு வந்த மகள் இவர்கள்
யாரென்று கேட்டுவிட்டு என்னைப் பார்த்தாள்...
நான் காணவில்லை
அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்...
- முகமது பாட்சா*
02/08/2019
No comments:
Post a Comment