Saturday, 17 August 2019

மங்களம் பாடிவிடாதே

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

லயம் கோர்த்த விழியால் 
அலாரிப்புகள் நிகழ்த்துகிறாய் 
ஜதிஸ்வரம் நெஞ்சில் தாளமிடுகிறது... 
தொலைவிலிருந்து நுழையும் சப்தராகம் 
தாழ்வொலியிலிருந்து 
மீயொலிக்கு மாறுகின்றன 
தபேலாவின் 
ஜதிப்பு விரல்கள் பல்கிப்பெருக 
நிருத்தியத்தில் காதலைக் கடத்துகிறாய் 
முத்திரைகளில் 
முத்தங்கள் சுழன்று சூழ்கின்றன... 
வர்ணமிசைக்க 
இதழ்கள் துடிக்கும் அபி நயத்தில்... 
சிக்கிக் கொள்கிறது 
அனாதையாகத் திரியும் காதல்... 
மங்களம் பாடிவிடாதே மாயவளே... 
நாட்டியமாடும் காதலுக்கு 
நாதஸ்வரம் தனித்தே இசைக்கட்டும்.

- மு.முகமது பாட்சா*
17/08/2019

panting : Artist Anubama

No comments:

Post a Comment

Popular Posts