
பாண்டவர்களோடு
கௌரவர்களும் பகடையில்
உருண்டு கொண்டிருந்தார்கள்
சுபலனின்
விரலைச் சுழற்றினான் சகுனி
எண்ணிய எண்கள் விழுந்தன...
பாஞ்சாலியின் சிரிப்பு
துச்சாதனின் கைகளில் சேலையாக
உரிந்து கொண்டிருந்தது...
பங்காளிகள் சண்டை
பற்றியெரிந்து கொண்டிருக்க
எங்கோ கேட்கும் புல்லாங்குழலிசையை
ஏகலைவன்
இசைத்துக் கொண்டிருந்தான்
- மு.முகமது பாட்சா*
28/08/2019
No comments:
Post a Comment