
அழகான ஒரு மீன் தொட்டி
அதில் விடுதலைக்காக நீந்துகிறது
வாஸ்து மீன்...
பஞ்சுப்பொதி சார்மணையில்
உறங்குகிறது
விலைக்கு வாங்கிய பொமேரியேன்...
வழுக்கிவிடாமலிருக்க
காஷ்மீர கம்பளித் தரை விரிப்புகள்
க்ரானைட் கற்கள் சுவாசிக்கத் திணறுகின்றன...
சுவர் சித்திரத்தில்
சுந்தரியின் விலை பத்து லட்சம்
பூசை மாடத்தில் பித்தளை விளக்கு...
இதற்குமேல்
இந்தக் கவிதையில் என்ன இருக்கப்போகிறது?
தெருவிலிருக்கும் நாயொன்று
எச்சில் தொட்டியைக்
கிளறிக் கொண்டிருந்ததைத் தவிர...
- மு.முகமது பாட்சா*
08/08/2019
என் மௌனத்தை
உன் வார்த்தைகளால்
பேசிக் கொண்டிருக்கிறாய்...
என் வார்த்தைகள்
எங்கு சென்றிருக்கும்?
- முகமது பாட்சா*
நிழல்தான் என்று
ஒதுங்கி செல்கிறேன்
அதன் கைகள்
நீண்டு கொண்டேயிருக்கின்றன...
நான் நிற்பதா? நடப்பதா?
- முகமது பாட்சா
No comments:
Post a Comment