Tuesday, 6 August 2019

கருப்புப் பூனை

கருப்புப் பூனை
படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூனை
கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொண்டது 
- 'க்ரோ.. நான் அழகாக இருக்கிறேன் இல்லையா!' 
என்று வியந்தது 
க்ரோ தலையைச் சாய்த்துப் பார்த்து 
- ;ஆம் மன்னா!'- ' என்றது... 
ப்ளாக்கன் என்ற அந்தக் கருப்பன் பூனை 
மீசையைத் தடவிக் கொண்டான்... 
நீ என்னைக் கடவுள் என்று கூட அழைக்கலாம்' 
க்ரோ பணிவாகத் தலையையாட்டி 
- 'அப்படியே காட்' என்றதும் 
- 'நான் என்னை ஏன் 
கடவுளென்று சொல்லிக் கொண்டேன் தெரியுமா?' 
- 'சொல்லுங்கள் காட்' 
- 'என் நிழல் கூட என் நிறம்தான்' 
என்று சிரித்த போது 
- 'என் நிழல் மட்டுமென்ன 
சிகப்பாகவா தெரியும்?' என்று கேட்க நினைத்தாலும் 
- 'ஆம் அதிசயம்தான் காட்' என்றது... 
அப்போது அந்தப் பக்கம் நகர்ந்த மௌஸ் 
சிரிக்க... 
கடுப்பானான் கருப்பன் 
- 'என்ன தைரியம்! என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்?' 
- 'நான்தான் உன் கடவுள் 
உன்னை ஓடஓட வேலை வாங்குவதே நான்தான்' 
என்று சிரித்தான் மௌஸ் 
சற்றென்று பறந்து மௌஸை கவ்விய க்ரோ 
- 'மன்னித்துவிடுங்கள் காட்... 
உங்களின் எதிரியை வீழ்த்தி 
நீங்கள் எனக்களித்த 
எளிய உணவாக மௌஸை எடுத்துக் கொண்டேன்' 
என்று சொல்லிவிட்டுப் பறக்க
கடவுள் பசியோடு இருந்தார்...

-மு. முகமது பாட்சா*
02/08/2019

No comments:

Post a Comment

Popular Posts