Wednesday, 21 August 2019

சுவரென்பது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சுவரேறிக் குதிப்பதைப் பற்றி 
யோசித்துக் கொண்டிருக்கிறேன்... 
சுவரென்பதே 
ஏறி குதிப்பதற்குத்தான் என்று 
திருடன் சொல்கிறான்... 
இனி வீடுகளில் 
சுவர்கள் இருக்கக் கூடாது என்று 
அரசாங்கம் சட்டம் இயற்றலாம்... 
சுவரென்பது 
சிறைச்சாலைகளுக்கு மட்டும் சொந்தம்.. 
சுவரில்லாமல் வீடு கட்ட 
அரசின் கைகளில் திட்டம் இருக்கலாம்... 
சுவருக்கான வரிகளைப் போட்டால் 
கட்டாமல் இருந்து விடுவார்கள்... 
எதிர்ப்புகள் இருந்தால் 
அதிகாரிகளுக்குச் 
சுவரேறிக் குதிப்பதற்கென்று 
பயிற்சி மையங்கள் தொடங்கலாம்.. 

- மு.முகமது பாட்சா*
22/08/2019

No comments:

Post a Comment

Popular Posts