Friday, 1 February 2019

நான் என்ற பிழை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், குளோஸ் அப் மற்றும் வெளிப்புறம்

சின்னச் சின்னத் திருத்தங்களுடன் 
நான் நடந்து செல்கிறேன்.... 
ஒப்பனையில் பவுடர் மிகுந்ததை 
ஒருவன் சுட்டிக் காட்டுகிறான்.... 
கால் செருப்புகள் மாறியிருப்பதை 
கடவுளின் ஆலயம் சுட்டிக்காட்டவில்லை... 
மீசைக் குறைந்துவிட்டதை 
கண்ணாடிதான் காட்டிக்கொடுத்தது... 
இடிப்பதுபோல் வந்தவன் 
சொல்லிவிட்டு வந்தீயா என்று கேட்கிறான்... 
எண்ணமுடியாது என்று தெரிந்தும் 
நட்சத்திரங்களை எண்ணுகிறேன்.... 
புன்னகைக்கும் போது 
ஓரத்தில் வலி மிகைத்துத்தான் இருக்கிறது... 
எனக்குள் 
இத்துணை திருத்தங்கள் இருக்கும்போது 
நான் என்ற வார்த்தை 
பிழையென்று 
யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை. 

- மு.முகமது பாட்சா* 
02 /01 /2019 

No comments:

Post a Comment

Popular Posts