Sunday, 17 March 2019

சாத்தான் விரட்டப்படுகிறான்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஜம்ரத்துல் அகபாவில் 
ஏழு சிறு கற்களை எறிகிறார்கள் 
சாத்தான் விரட்டப்படுகிறான்... 
நீச பிசாசுகளை விரட்டிடும் 
சிலுவை ஐயாவே 
எமக்கு உதவியாக வாரும்... 
சாத்தான் விரட்டப்படுகிறான் 
பிடாரி 
ஆங்காரம் போர்த்தி ஆடுகிறாள் 
காலின் கீழ் பிசாசன் 
சாத்தான் விரட்டப்படுகிறான் 
மக்கள் வரிசையில் நிற்கிறார்கள் 
வாக்கு எந்திரங்கள் 
சப்தமிட்டு ஜெபிக்கின்றன... 

- மு.முகமது பாட்சா* 
18 /03 /2019

No comments:

Post a Comment

Popular Posts