Wednesday, 20 March 2019

கொண்டாட்டம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூ


விரல்களின் நுனியில்
ஒட்டிக்கொண்டிருக்கும் வார்த்தைகள்
எனக்கு வாழ்த்துகள் சொல்கின்றன...
நான் எழுதும் தாள் படபடக்கிறது...
என்னையே 
பார்த்துக் கொண்டிருக்கும் வரிகள்
என்னைப் பற்றிய கவிதையை 
எழுதப் போகின்றதாம்...
நிலாவின் சுவரிலிருந்து
எழுத்துகள் பூக்களாகப் பொழிகின்றன...
நதிகள் சில வார்த்தைகளை
என் மீது வீசிவிட்டுச் செல்கிறது...
பட்டாம் பூச்சிகள் முத்தம் கொடுக்க
நான் வெட்கத்தால் சிவந்து போகிறேன்...
நட்சத்திரங்கள் கண் சிமிட்டியதை
அதிசயமாகப் பார்க்கிறேன்...
பறவைகள் பாட்டிசைக்க
கவிதை வனம் அழகாக மிளிர்கிறது...
ஏன் இத்துணைக் கொண்டாட்டம்?
இன்று கவிதைகள் தினமென
தென்றல்காற்று காதில் சொல்லிவிட்டு
பூக்களோடு மோதி சிரிக்கிறது.

- மு. முகமது பாட்சா*
21 /03/2019

No comments:

Post a Comment

Popular Posts