Sunday, 24 March 2019

முடிவில்லாத விவாதம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் அமர்ந்துள்ளனர், மேஜை மற்றும் உட்புறம்

எழுதாத கவிதைகளின் 
முடிவுகள் தொலைந்ததைப் பற்றிச் 
சூடாக விவாதிக்கிறோம் 
விவாதம் சூடு பிடிக்கத் 
தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது... 
தொடங்கும் போது வரும் வார்த்தைகள் 
முடிக்கும்போது கிடைப்பதில்லை 
முடிவே கிடைக்காததால் 
கவிதைகள் நீண்டுவிட்டதாகப் பராதி... 
தன்னை முடித்துக்கொள்ள 
கவிதைகளுக்கே தெரியும் என்ற வாதங்களை 
ஏன் கவிஞனுக்குத் தெரியாதா? 
என்ற வாதம் அலைக்கழிக்கிறது... 
மொழியறிவுதான் மூளையென்ற வாதம் 
நடுவில் சேர்ந்து கொள்ள... 
பெயர் அறியாத ஞானிகள் 
அங்கே வந்து அமர்ந்துகொள்கிறார்கள்... 
இன்னொருவர் மூளையினால் 
எழுத விரும்பாத இந்தக் கவிதை 
தன் வரிகளை 
இத்துடன் முடித்துக் கொள்கிறது. 
அறிவாளிகள் அங்கேயே அமர்ந்து 
தேநீர் அருந்துகிறார்கள்.

- மு.முகமது பாட்சா*
25/03/2019

No comments:

Post a Comment

Popular Posts