
மௌனத்தோடு
உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.
மௌனம் அழுத்தமாகவே இருக்கிறது...
என் அருகில் இருக்கும் மரம் தீப் பிடித்து எரிய...
அங்கு மழை பெய்வதாகக்
கற்பனை எழுதிக் காட்டுகிறது.
பூக்கள் பூப்பெய்தியிருக்கலாம்
இரண்டு பட்டாம் பூச்சிகள்
என்னைக் கடந்து போகின்றன...
கடந்து போனவர்கள் என்னைப் பார்க்கவேயில்லை.
துயரம் அங்கேயே அழுது கொண்டிருக்கிறது..
ஒரு சிறுமி கையாட்டிவிட்டுப் போகிறாள்.
கோமாளிகள் இருவர்
மௌனத்தைச் சாட்டையால் அடிக்கிறார்கள்...
மௌனத்தைக் காணவில்லை.
அவர்களைக் கட்டியணைத்து
முகமூடிகளைக் கழற்றுகிறேன்...
அவர்களின் கண்கள் அழுது கொண்டிருக்கின்றன.
- மு.முகமது பாட்சா*
20 /03 /2019
No comments:
Post a Comment