Sunday, 3 March 2019

நழுவும்ம்ம் மோகம்



தப்பில்லையென்பது எது? 
சற்றே நிமிரும் பார்வை வெளிச்சத்தில் 
மோகம் காற்றசைக்க 
திமிரும் பிரதேசங்களைச் சிற்பமாக்கிக் 
கையசைக்கிறோம்... 
அவன் வெட்கப்பட்டு நகர்கிறான்... 
ஆனாலும் 
பார்வை ஊடுருவி சில்மிசம் செய்கிறது... 
பற்றவைத்த கஞ்சாப் புகை 
திசுக்களையெல்லாம் உசுப்பிவிட 
அரை மயக்கத்தில் ஆடை பிசுபிசுப்புகள்... 
'அவன் சூப்பர் மச்சி' என்று 
பார்வையைக் கீழிறக்கி நகர்த்த... 
அருகில் வந்தவன் 
உதட்டைத் தடவிவிட்டுப் போகிறான்... 
நுரைக்கும் ஒயின் இரசத்தில் 
இரண்டுடல்கள் பின்னிப் பிணைகின்றன... 
சற்று விலையதிகம்தான் என்றாலும் 
அவனை விட்டுவிட மனசில்லை.... 
தப்பில்லையென்பது எது? 
ஆடைகள் மெல்ல நழுவிக்கொண்டிருந்தன.

- மு.முகமது பாட்சா*
03/03/2019

No comments:

Post a Comment

Popular Posts