Monday, 11 March 2019

தூர்த்த மிருகங்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்த ஒலிதம் 
அழுகிறது கதறுகிறது 
அரை நிர்வாணமாய் நின்று கெஞ்சுகிறது 
பசித்த மிருகங்கள் 
பற்களால் கீறுகின்ற போது 
வலிப்பதாகச் சொல்லி அலறுகிறது... 
கீழாடை உரித்தபின்பும் 
அண்ணா அண்ணா என்று கெஞ்சுகிறது 
அதற்கும் இரங்கா மிருகங்கள் 
யோனிப்பசி மிகுத்துக் குதறுகையில், 
நம் காதுகளின் நரம்புகளறுந்து 
கண்களின் வழி 
உதிரமாகவே கொட்டுகிறது... 
கோப நரம்புகள் முறுக்கேறச் 
சாந்தமாக அதனைச் சாத்திவிடாதீர்கள்... 
காமுகப் பிண்டங்களின் 
ஈரல்குலைகளைச் சிதைத்தெடுத்து 
நாம் வெளியில் வீசும் வரை. 

- முகமது பாட்சா* 
11 /03 /2019 

No comments:

Post a Comment

Popular Posts