
நான் உவமானமா?
உவமேயமா?
இடைச் சொற்களில் வாழும் நேசமா?
எங்குதான் செல்கிறது இந்தச் சாலை?
பயணத்தையறியாமல்
ரகசியம் படிக்கிறேன்
ரகசியம் என்னைத் தினமும் படிக்கிறது...
உலகத்தைப் படித்ததாய்
தினமும் ஓதிக்கொண்டேன்
இதயத்தைப் படிக்காதவன்
இருளைப் பற்றிப் பேசுவதில்
என்ன நியாயம்?
மழையென்று எழுதிவிட்டு
நனைகிறேன்
பனியென்று எழுதிவிட்டுக் குளிர்கிறேன்
சுவையென்று எழுதியப் பின்பும்
சுவைக்காத உணவுகளை
எப்படி ருசிப்பேன்?
பாதங்களில் ஒட்டிய மண்ணைக்
கழுவியவன்
தேகங்களிலொட்டும் மண்ணை
என்ன செய்வேன்?
எழுதாத தாளில்தான்
எத்துணை உவமைகள்?
உவமேயம் மட்டும் புரியாமல் அழுகிறது.
- மு.முகமது பாட்சா*
24/03/2019
No comments:
Post a Comment