
எல்லாம்
முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள்...
முடிவு என்பது முடியாததென்று
ஒரு பாடல் ஒலிக்கிறது...
சப்தமில்லாத குரல்களில் அவர்கள்
நன்றாகவே பேசிக் கொள்ளட்டும்...
ஆழ்மனச் சப்தமொன்று
அலைகளோடு பயணிக்கிறது...
வலைப் பின்னும் சிலந்திக்கும்
வலையில் மரணம் காத்திருக்க...
இரையைத் தேடுவதற்கு
எட்டுக் கால்கள் தேவைப் படுகிறது...
உறங்குகின்றவன் எழுந்த பிறகுதான்
மரணம் ஓய்வெடுக்கும்...
மறுமை என்பது புரியாததென்றாலும்
மரணத்திற்கு
இங்கு முற்றுப்புள்ளியில்லை...
- மு.முகமது பாட்சா*
17 /03 /2019
No comments:
Post a Comment