Friday, 1 March 2019

நைந்த கவிதை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அந்தக் கவிதை 
எனக்கு மிகவும் பரிச்சயமானது... 
நான் அதனோடு 
அதிகம் விவாதித்திருக்கிறேன்... 
பிணக்குகளில் 
நாங்கள் முகம் திருப்பியிருக்கிறோம்... 
ஆனாலும் தேநீரைச் 
சேர்ந்தருந்துவது சுவைக்கூடல்... 
சமீபத்தில் அந்தக் கவிதையை 
பலச்சரக்குகடை பொட்டலமாகப் பார்த்தேன் 
மிளகாய் மடித்திருந்ததால் 
நெடியாக இருந்தது... 
என் கண்களில் கண்ணீர் வழிந்தது... 
அந்தக் கவிதையைக் கொண்டு 
கண்களைத் துடைத்துக் கொள்ள முடியாது.... 
கண்கள் எரிச்சலாகிவிடும்... 
தாள் மொத்தமாக நைந்து போயிருந்ததால் 
வார்த்தைகளை மட்டும் 
தேடியெடுக்கிறேன்... 
அஃது என்னோடு எப்போதும் பேசும்.

- மு.முகமது பாட்சா*
28/02/2019

No comments:

Post a Comment

Popular Posts