Thursday, 21 March 2019

நிலவு இறந்துவிட்டதா?

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

யாருக்கான இரங்கல் கூட்டமிது? 
வானத்தில் இத்துணை மெழுகுவர்த்திகள் 
நிலவு இறந்துவிட்டதா? 

கால்கள் திசையறியாமல் போகின்றன 
கனவுகள் எனக்கு முன்னே செல்கிறது 
கஃபன்துணி வாங்கவா இத்துணை அவசரம்? 

நிழலை மடிக்கத் தெரியாதவன் 
நிஜம் நீயென்று நம்பிக்கொண்டிருக்கிறேன் 
இங்கு எதுதான் வெளிச்சம்? 

சிறகுகள் தேவையில்லை கண்ணே 
கைகளே போதுமெனக்கு 
உன்னைக் கண்டதும் கட்டியணைக்க... 

மண் சுவாசித்துக் கொண்டிருக்கட்டும் 
மண்ணறையில் உறங்கும் போதும் 
என் காதல் இறவாமல் சுவாசிப்பதற்காக! 

யாருக்கான இரங்கல் கூட்டமிது? 
வானத்தில் இத்துணை மெழுகுவர்த்திகள் 
நிலவு இறந்துவிட்டதா? 

- மு.முகமது பாட்சா*
22/03/2019

No comments:

Post a Comment

Popular Posts