Friday, 1 March 2019

இசைக்கும் கவிதை



படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்


இசைக்கான கவிதையாக அஃதிருக்கலாம் 
அதனெழுத்துகள் 
கறுப்பு வெள்ளையில் அசைந்து கொண்டிருக்கின்றன 
ஒரு புல்லாங்குழல் மூங்கிலாகி 
காற்றை அசைக்கிறது... 
வலசைக்குருவிகளின் சப்தம் 
வார்த்தைகளாக உதிர்ந்திருக்கின்றன... 
சர்பத்தை விரட்டும் எலிகளின் சங்கீதத்தை 
எளிமையாக மொழிப் பெயர்க்கிறேன்... 
பாங்கினோசையோடு 
ஆலயமணியும் இணைந்து கொள்கிறது... 
வார்த்தைகளின் மீது 
சூஃபியொருவர் நடந்து செல்ல 
மழைத்துளிகள் ஜலதரங்கக் கிண்ணங்களில் 
வார்த்தைகளாக இசைக்கின்றன... 
நான் 
மெய் மறந்து திளைக்கின்றேன் 
மொழியென்னை 
சூழ்ந்து கொண்டு வாசிக்கிறது....

- மு.முகமது பாட்சா*
01/03/2019

No comments:

Post a Comment

Popular Posts