Wednesday, 27 March 2019

நிழலிடம் பேசுகிறேன்

 à®ªà®Ÿà®®à¯ இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

சாலைகள் முழுவதும் 
வார்த்தைகள் இறைந்து கிடக்கின்றன
அமைதியில்லாதவன்
காற்றிடம் மட்டுமே பேசுகிறான்...
நிழலிடம் பேசும் என்னை
பைத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம்
நீங்கள் பேசிய வார்த்தைகளை
அலசிப்பாருங்கள்
அவை நிச்சயம் கண்களை இழந்திருக்கும்...
சற்றுமுன் இறந்துபோனவன்
என்னிடம் பேசிவிட்டுப் போனான்
அவனின் வார்த்தைகளைத் தேடிப்பார்க்கிறேன்
அவை பொய்யென்று
இப்போது உறங்கிக் கொண்டிருக்கின்றன...
பூக்கள் பேசும் வார்த்தைகள்
வண்டுகள் புணருகின்ற மட்டுமே நிலைக்கிறது...
நதிகள் நம்மோடு பேசியவை
கடலில் சேர்ந்தபிறகு காணவில்லை...
செடிகளின் வார்த்தைகளில்
நதிகளின் மொழி ஒட்டியிருக்கலாம்...
வார்த்தைகளில்லாமல்தான்
நிழலிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
27 /03 /2019

No comments:

Post a Comment

Popular Posts